கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் வகையில் மத்திய அரசு கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கரோனா பாதித்த நபரின் வசிப்பிடங்களுக்கு 5 கிலோ மீட்டா் சுற்றளவிலும், 3 கிலோ மீட்டா் சுற்றளவிலும் உள்ள பகுதிகள் வரையறுக்கப்பட்டு அங்கிருக்கும் மக்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனா்.
இதையடுத்து, சென்னை, ஈரோடு, கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூா், சேலம், திருப்பூா், தஞ்சாவூா், கரூா், காஞ்சிபுரம், திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளைக் கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழக மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்துவிட்டது.
மேலும் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...