தாய்லாந்து நாட்டினர் மூவருக்கு கரோனா தொற்று இல்லை
ஈரோட்டில் இருந்து மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைபெற்றுவரும் தாய்லாந்து நாட்டினர் 6 பேரில் மூவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது


ஈரோட்டில் இருந்து மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைபெற்றுவரும் தாய்லாந்து நாட்டினர் 6 பேரில் மூவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 11 ஆம் தேதி ஈரோடு கொல்லம்பாளையம் வந்து மத பிரசங்கம் செய்தனர். இதில் இருவர் தாய்லாந்து செல்ல கோவை விமானம் நிலையம் சென்றபோது அங்கு இருவருக்கும் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஒருவர் கோவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றொருவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
கோவையில் அனுமதிக்கப்பட்டவர் சிறுநீரகப் பிரச்னையால் உயிரிழந்தார். அவர்கள் கூறிய தகவலின் பேரில், ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை மசூதியில் இருந்த தாய்லாந்து நாட்டினர் 5 பேரை பிடித்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மற்ற மூவருக்கும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த 3 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது: 6 நபர்களின் ரத்த மாதிரிகளும் சுகாதாரத்துறை மூலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் மூவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
மற்ற மூவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்ட மூவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...