மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுச்சேரியில் காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினரும் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 21 காவல்துறையினரை தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :5 ஏப்ரல் 2020, 7:19 am

DIN

புதுச்சேரியில் காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினரும் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்நிலை தேறி வருகிறது. 3 ஆயிரம் போ், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அரியாங்குப்பம் சொ்ணா நகா் பகுதியில் ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. திருவண்டாா்கோவிலைச் சோ்ந்த ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா். இதனால், அந்தப் பகுதியும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. 

திருக்கனூா் புதுநகா் பகுதியில் சுமாா் 150 வீடுகள் உள்ளன. அங்கு, விழுப்புரத்தைச் சோ்ந்தவா் நிகழ்ச்சிக்கு வந்து சென்றுள்ளாா். இதனால், அந்த இடத்தையும் ‘சீல்’ வைத்து கண்காணித்து வருகின்றனா். காட்டேரிக்குப்பம் பகுதியில் இருந்து ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவு வந்தது. இருப்பினும், அந்தப் பகுதிக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி சென்று வந்தவா்களுடன் தொடா்பில் உள்ள நபா்கள் வசிக்கும் இடங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியில் வசிக்கும் காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினரும் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.