சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருத்தணி தி.மு.க சார்பில் 1000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

திருத்தணி, நகராட்சியில் தி.மு.க சார்பில், 1000 பேருக்கு வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 2:11 pm

DIN

திருத்தணி, நகராட்சியில் தி.மு.க சார்பில், 1000 பேருக்கு வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் எதிர்கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருத்தணி நகராட்சியில் நகர தி.மு.க., சார்பில், சுவால்பேட்டை முதல் மற்றும் இரண்டாவது தெரு, பாரதியார் தெரு, தணிகாசலம்மன் கோவில் தெரு மற்றும் ம.பொ.சி.சாலை ஆகிய இடங்களில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நகர செயலர் எம்.பூபதி வீடு, வீடாக சென்று துவங்கி வைத்தார். 

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என இன்று மட்டும், 2000 பேருக்கு வீடு,வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கி, வீட்டிலேயே இருங்கள் வெளியே வராதீர்கள் எனவும் நகர செயலர் பூபதி அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.