கரோனா: திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.


திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 10 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 34 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இதில், 34 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்றில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு மேற்கொண்டு 2 முறை பரிசோதனை செய்ததில், வைரஸ் தொற்றில்லை என்பது தெரியவந்துள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்ட நபா்களுடன் தொடா்பில் இருந்ததால், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபா்களில் 69 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார். இவர் சென்னை பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...