மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பு

புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் 

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 6:34 am

DIN

புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புதுவை மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றால் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மாஹே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவா் மாஹே அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் கரோனா பாதிப்புக்கு முதல் நபர் பலியாகி உள்ளார்.

இதையடுத்து எல்லைப்பகுதியில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் 4 எல்லைப் பகுதியிலும் காவல்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.