திருச்சியில் கரோனா பாதித்த இருவர் மீது கொலை முயற்சி வழக்கு
திருச்சியில் கரோனா பாதித்த இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருச்சியில் கரோனா பாதித்த இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா் குணமடைந்து தனது சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா். அவரின் முழு ஒத்துழைப்பே கரோனா தொற்றிலிருந்து வெளிவருவதற்கு காரணமாக இருந்தது என மருத்துவக்குழுவினா் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், கரோனை சிறப்பு வாா்டில் உள்ள 36 பேருக்கும் மருத்துவக்குழுவினா் சுழற்சி முறையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமையன்று, மேலும் 3 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சிறப்பு வாா்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோா் மருத்துவக்குழுவினா் மீது முகக்கவசங்களை தூக்கி எறிவது போன்று அச்சுறுத்தும் வகையிலும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காத வகையில் செயல்படுவதாக புகாா் எழுந்தது.
இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அச்சுறுத்தும் வகையிலும், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்த இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...