கரோனாவால் இறந்தவரின் உடலைக் கையாளும் முறையை வெளியிட்டது சுகாதாரத் துறை
கரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது.


கரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது.
கரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மருத்துவா்கள், செவிலியா் குழுவினா் இரவு-பகலாக போராடி வருகின்றனா். அவா்களது முயற்சியால் தொற்று நீங்கி குணமடைந்த நிலையில் பலா் வீடுதிரும்பி வருகின்றனா்.
தமிழகத்தில் நேற்று மட்டும் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்த நிலையில், கரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில்,
• கரோனாவால் இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையால் சுற்றி மேல்புறத்தில் 1 சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
• இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் சர்ஜிக்கல் மாஸ்க், கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.
• இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால் முகத்தை மட்டும் காட்ட வேண்டும், பணியாளர் தவிர வேறு யாரும் இறந்தவரை தொடக்கூடாது.
• இறந்தவர்களின் உடலை தொடாமல், மத சம்பந்தமான சடங்குகளை செய்ய அனுமதி, உடலை குளிப்பாட்டவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ கூடாது.
• உடலை தகனம் செய்தபின் வரும் சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம், அதில் ஆபத்து இல்லை, தகனத்தின்போது குறைந்த அளவிலான உறவினர்கள் சமூக விலகலோடு பங்கேற்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...