மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுச்சேரியில் 42,357 கட்டடத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் 42,357 கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :21 ஏப்ரல் 2020, 9:34 am

DIN

புதுச்சேரியில் 42,357 கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கரோனா பாதிப்புக்குள்ளான 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய 42 பேரை பரிசோதித்ததில், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, புதுவை அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 2,000 வழங்கியுள்ளது. 

மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதற்கான கோப்பு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு நிவாரணம். இந்நிலையில் கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ரூ. 1,000 வழங்கப்படும். 

இதன் மூலம் 28,160 அமைப்புசாரா தொழிலாளர்கள் பலனடைவர். இதே போல, கட்டடத் தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 2,000 வழங்கப்படும். இதன் மூலம் 42,357 கட்டடத் தொழிலாளர்கள் பலனடைவர். இந்தத் தொகை புதன்கிழமை முதல் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தளர்த்த முடியாது. புதுவையில் கரோனா ஊரடங்கு கட்டுக்குள் வைத்துள்ள இந்த நிலையை தளர்த்த முடியாது. 

புதுவை மக்களின் உயிர்தான் முக்கியம். அதனால் பொருளாதாரத்தில் எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும், நெருக்கடி வந்தாலும் அதனை சந்தித்து, புதுவை மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார் முதல்வர் வே. நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.