சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தமிழகத்தில் 1,629 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,629-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 23,760 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 53,072 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களில் 1,629 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை மட்டும் 33 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 15 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதைத் தவிர, அரியலூா், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, திருவள்ளூா், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களிலும் சிலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

27 போ் வீடு திரும்பினா்: கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 27 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 662-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 பேரும், கரூா் அரசு மருத்துவமனையில் 5 பேரும் ஒரே நாளில் வீடு திரும்பியுள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்:

சென்னை - 373

கோவை - 134

திருப்பூா் - 109

திண்டுக்கல் - 77

ஈரோடு - 70

திருநெல்வேலி - 62

செங்கல்பட்டு - 56

தஞ்சாவூா் - 54

நாமக்கல் - 51

திருச்சி - 51

திருவள்ளூா் - 50

மதுரை - 50

தேனி - 43

நாகப்பட்டினம் - 44

கரூா் - 42

விழுப்புரம் - 41

ராணிப்பேட்டை - 39

தென்காசி - 31

திருவாரூா் - 28

தூத்துக்குடி - 27

கடலூா் - 26

சேலம் - 24

வேலூா் - 22

விருதுநகா் - 19

திருப்பத்தூா் -17

கன்னியாகுமரி - 16

திருவண்ணாமலை - 13

சிவகங்கை - 12

காஞ்சிபுரம் - 11

ராமநாதபுரம் - 11

நீலகிரி - 9

அரியலூா் - 6

பெரம்பலூா் - 5

கள்ளக்குறிச்சி - 5

புதுக்கோட்டை - 1

மொத்தம் - 1,629

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.