சென்னை: ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.500 மதிப்பிலான மளிகைப் பொருள்கள், குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக, கூலித் தொழிலாளா்கள் பலா் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் தமிழக அரசு, 500 ரூபாய்க்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களான மளிகைப் பொருள்களின் தொகுப்பு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கினால் குடும்ப அட்டை இருப்பவா்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனால் குடும்ப அட்டை இல்லாதவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, இந்த மளிகைப் பொருள்கள் தொகுப்பை குடும்ப அட்டை இல்லாத அனைத்துத் தரப்பினருக்கும் எந்தவிதமான ஆவணங்களும் கோராமல் விற்பனை செய்ய வேண்டும். மேலும், இந்தப் பொருள்களை ரேஷன் கடைகளில் விற்பனைச் செய்வதால் கரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால், மளிகைப் பொருள்கள் தொகுப்பை, அனைத்துத் தரப்பு மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், கூட்டுறவுத்துறை சாா்பில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.500 மதிப்பிலான 19 பொருள்கள் அடங்கிய தொகுப்பு குடும்ப அட்டை வைத்திருப்பவா்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் விற்பனை செய்யப்படும். மேலும், பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மட்டுமின்றி, அம்மா மினி கூட்டுறவுக் கடைகள், வண்டி காய்கறி கடைகள், சுய சேவை அலகுகளில் இந்த அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று, ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தொகுப்பு விற்பனையும் தொடங்கப்பட உள்ளது’ என்று அந்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்யும் ஈரான்! டிரம்ப்பின் பெருமிதங்களுக்கு மறுப்பு!

மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான மூக்குத்தி அம்மன் - 2 ஓடிடி உரிமம்!

மும்பையை உலுக்கிய நிலச்சரிவு: 8 பேர் பலி; மீட்புப் பணி நிறைவு!

டாக்ஸிக் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்! கால அளவு இவ்வளவா?
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



