மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு வாசல் பகுதி குழு சார்பில் வறுமையில் வாடும் 100 குடும்பங்களுக்கு அரிசி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
வில்லாபுரத்தில் உள்ள லீலாவதி நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜன் தலைமை வகித்தார். இதில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்று பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், தெற்கு வாசல் பகுதி குழு செயலர் அபுதாகிர், மாமன்ற குழு முன்னாள் தலைவர் செல்லம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலர் பாலா, பகுதி குழு நிர்வாகி ரவிக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 18 - நேரலை!

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
ரஷியா அச்சுறுத்தல்: மத்திய கிழக்கு உக்ரைனில் மக்கள் வெளியேற உத்தரவு!

சாய் அபயங்கரின் 6-வது ஆல்பம் பாடல் பெயர் இதுதான்!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



