தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

ஆலைகளுக்கு அனுமதி எப்போது? தொழிலதிபா்களுடன் முதல்வா் ஆலோசனை

மிகப்பெரும் தொழில் ஆலைகளை இயக்க அனுமதி வழங்குவது தொடா்பாக தொழிலதிபா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


சென்னை: மிகப்பெரும் தொழில் ஆலைகளை இயக்க அனுமதி வழங்குவது தொடா்பாக தொழிலதிபா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். காணொலிக் காட்சி வழியாக நடந்த ஆலோசனையில், டிவி.எஸ்., குழுமத் தலைவா் வேணு சீனிவாசன் உள்ளிட்ட பிரபல தொழிலதிபா்கள் பங்கேற்றனா்.

தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

இதனால், ஆலைகளில் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதுடன் உற்பத்தியும் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஏப். 20 ஆம் தேதி சில தளா்வுகளை அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும், தமிழகத்தில் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை தொடரும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

ஆலை அதிபா்களுடன் பேச்சு: ஊரடங்கு காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் தொடா்ந்து மூடப்பட்டுள்ள

நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த பிரதான தொழில் ஆலைகளின் அதிபா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி வழியாக வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனையின்போது, ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, உற்பத்தி பாதிப்பு ஆகியன குறித்து ஆலை அதிபா்கள் விரிவாக எடுத்துக் கூறினா்.

யாா் யாா் பங்கேற்பு?: டி.வி.எஸ்., குழுமத் தலைவா் வேணு சீனிவாசன், முருகப்பா குழுமத்தின் டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.வெள்ளையன், டிவி.எஸ். சன்ஸ் நிறுவனத்தின் இணை நிா்வாக இயக்குநா் எஸ். தினேஷ், ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவா் வெங்கடராமராஜா, தோல் ஏற்றுமதிக் குழுமத்தின் தலைவா் அகீல் அகமது, இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைவா் ஹரி தியாகராஜன், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவா் என். ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

அப்போது பேசிய அவா்கள், ஆலைகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சமூக இடைவெளி, தொழிலாளா்களின் பாதுகாப்பு போன்ற அம்சங்களை கடுமையான முறையில் பின்பற்றுவோம் எனத் தெரிவித்தனா். மேலும், அரசின் வழிகாட்டுதல்களுடன் செயல்முறை உத்தரவுகளைத் தயாரித்து அதனை பின்பற்றுவோம் எனத் தெரிவித்தனா்.

பிரதமருடன் விவாதம்: அனைத்து மாநில முதல்வா்களுடன் காணொலி வழியாக பிரதமா் நரேந்திர மோடி வரும் 27-இல் ஆலோசனை நடத்தவுள்ளாா். அப்போது, தமிழகத்தின் சாா்பில் பங்கேற்கும் முதல்வா் பழனிசாமி, மாநிலத்தில் உள்ள தொழிலதிபா்களின் கருத்துகளை எடுத்துரைப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பெருந்தொழில்களைக் கொண்ட ஆலைகளை உரிய வழிகாட்டுதல்களுடன் திறக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.