ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 10:51 am

DIN

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கன மழையும், தேனி, மதுரை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு. 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுரை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேற்கு வங்காளம் - ஒடிசா ஒட்டியுள்ள வடக்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடம். 

தமிழகத்தின் மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி பதிவாகக்கூடும் என்பதால் அடுத்துவரும் 3 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

அதிகபட்சமாக கன்னியாகுமரி சிற்றாறு - 7 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சவெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.