சங்ககிரியில் மேலும் இரு நாள்கள் முழு ஊரடங்கு: குழப்பத்தில் மக்கள்
சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி பகுதிகள்குள்பட்டது. சங்ககிரி நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமை இரு நாள்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன.


சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி பகுதிகள்குள்பட்டது. சங்ககிரி நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமை இரு நாள்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திங்கள்கிழமை காய்கறிகடைகள், மளிகைகடைகள் திறக்கப்படாததால் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர் மக்கள். எப்பொழுது கடைகள் திறக்கப்படும் என்பதை மக்களுக்கு முழுமையாக அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து பின்னட்டு மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்று மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏப்ரல் 25, 26 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வகையான கடைகள், சந்தைகள் உள்ளிட்டவை அனைத்தும் முழுமையாக மூடப்படுகிறது எனவும் மேலும் முழு ஊரடங்கு நாள்களில் பொதுமக்கள் யாரும் வீட்டை வீட்டு வெளியே வரவேண்டாம் எனவும் இத்தடையை மீறி வெளியே வருபவர்கள், வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் உள்ளஒலி பெருக்கி மூலம் ஏப்ரல் 24ம் தேதி வெள்ளிக்கிழமை காலை புதிய எடப்பாடி சாலையில் காய்கறிகள், மளிகை பொருள்கள் வாங்க வந்தவர்களிடம் ஏப்ரல், 25, 26 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் செயல்படாது யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மீண்டும் வழக்கம் போல் ஏப்ரல் 27ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டன. இதே அறிவிப்பினை காவல்துறையின் சார்பில் ஏப்ரல் 24ம் தேதி வெள்ளிக்கிழமை சங்ககிரி நகர் முழுவதும் வாகனங்களின் மூலம் அறிவிப்பு செய்தனர்.
பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமை இரு நாள்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருள்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். இந்நிலையில் ஏப்ரல் 27ம் தேதி திங்கள்கிழமை காலை வழக்கம் போல் மக்கள் காய்கறி, மளிகை பொருள்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது அங்கு கடைகள் திறக்கப்படாதததால் திரும்பிச் சென்றனர். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒலி பெருக்கியில் மீண்டும் ஏப்ரல் 27, 28 திங்கள்,செவ்வாய்க்கிழமை இரு நாள்கள் கடைகள் செயல்படாது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த இருநாள்கள் முழு ஊரடங்கு குறித்து சங்ககிரி நகரில் பொதுமக்களுக்கு முறையாக அறிவிப்பு செய்யாததால் சனி, ஞாயிற்றுகிழமைகளுக்கு தேவைப்படும் பொருள்களை மட்டும் பொதுமக்கள் வாங்கி சென்றுள்ளனர்.
மேலும் இருநாள்கள் முழு ஊரடங்கால் பொதுமக்கள் மளிகைபொருள்கள், காய்கறிகள் கடைகள் திறக்கப்படாததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே ஏப்ரல் 27, 28 திங்கள், செவ்வாய் முழு ஊரடங்கு குறித்து பொதுமக்களுக்கு தெளிவான முழுமையான அறிவிப்பினை செய்ய வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...