ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோயம்பேடு பழச்சந்தை, மலர் அங்காடிகள் மாதவரத்திற்கு மாற்றம்

கோயம்பேடு பழச்சந்தை மற்றும் மலர் அங்காடிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் மறுஉத்தரவு வரும்வரை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 11:33 am

கோயம்பேடு பழச்சந்தை மற்றும் மலர் அங்காடிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் மறுஉத்தரவு வரும்வரை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

காய்கறிக் கடைகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் செயல்படும். ஆனால், கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும். அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே வியாபாரிகள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் வருவதற்கு(சில்லறை விற்பனை) முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. 

காய்கறிகளை ஏற்றி வரும் வெளிமாநில/ வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கோயம்பேடு சந்தைக்குள் அனுமதிக்கப்படும். 

கோயம்பேடு வியாபாரிகள் மூவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சிஎம்டிஏ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.