ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 7:56 am

DIN

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெயிட்ட தகவலில், தமிழகம், புதுவை, காரைக்காலில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த காற்று(30 முதல் 40 கிலோமீட்டர்) மற்றும் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுமாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சிலபகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.  அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சவெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் பொன்னையில் 4 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.