நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோடியக்கரையில் ஹோவர் கிராப்ட் அதிக நவீன படகு மூலம் கடலோரக் காவல் படை கண்காணிப்பு

கோடியக்கரையில் தரையில் நிறுத்தப்பட்டுள்ள ஹோவர் கிராப்ட் அதிக நவீன படகு மூலம் கடலோரக் காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

News image

கோடியக்கரையில் தரையில் நிறுத்தப்பட்டுள்ள ஹோவர் கிராப்ட் அதிக நவீன படகு

Updated On :4 ஆகஸ்ட் 2020, 12:57 pm

DIN

கோடியக்கரையில் தரையில் நிறுத்தப்பட்டுள்ள ஹோவர் கிராப்ட் அதிக நவீன படகு மூலம் கடலோரக் காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து (ஹோவர் கிராப்ட்) படகு மூலம் கடலோரக் காவல் படையினர்  செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 15-ல் கொண்டாடப்பவுள்ள நாட்டின் சுதந்திரத் தினத்தையொட்டி பல்வேறு நிலைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் மற்றும் கடலோரப் பகுதியில் அன்னிய சக்திகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கடலோர காவல் படை (கோஸ்டல் கார்டு) தென் கடலோரப் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. சென்னை முதல் மண்டபம் கடல் பகுதி வரையில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் என அழைக்கப்படும் அதிநவீன ரோந்து படகில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோடியக்கரை கடல் பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட இந்த படகு கடலோர தரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.