கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மரம் விழுந்ததைத் தொடர்ந்து அதனை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் பெய்து வந்த சாரல் மழையால் மன்னவனுர் பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்தன.
இதனை அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் போக்குவரத்தை சீர் செய்து சாலையில் விழுந்த மரங்களை அகற்றினர்.
கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் வழக்கத்திற்கு மாறாக குளிர் அதிகமாக நிலவுகிறது. பலத்த காற்று காரணமாக கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனுர், கிளாவரை, பூண்டி உள்ளிட்டபகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேன்சன் குத்து பாடல்!

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

இந்திரா பாடல் வெளியீடு!

அமைச்சா் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதியில் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


