தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீனவர் கொள்கை 2020 ரத்து செய்யக் கோரி ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image

ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Updated On :8 ஆகஸ்ட் 2020, 10:27 am

DIN

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீனவர் கொள்கை 2020 ரத்து செய்யக் கோரி ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் சார்பில் மீனவர்களை பாதிக்கும் வகையில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மீனவர் கொள்கை 2020 யை ரத்து செய்ய கோரியும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல்  அளவை உயர்த்தி வழங்கிட வேண்டும், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் மீன்பிடி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. 

இந்த சி.பி.ஐ தாலுகா செயலாளர் முருகானந்தம்,நிர்வாகிகள் மோகன்தாஸ், ஜோதிபாசு,சினிஜகுபர்,திருவாசகம்,பிச்சை,நாகராஜன்,கன்னியம்மாள்,மாடசாமி அன்சரி,தர்மா  உள்ளிட்ட மீனவ சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.