புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 1.40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

News image
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
Updated On :9 ஆகஸ்ட் 2020, 7:59 am

DIN



பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 1.40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

கர்நாடகா மாநிலம் குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதி மற்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து சனிகிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு1.43 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்தன. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 56 ஆயிரம் கனஅடியாக இருந்த தண்ணீரின் அளவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்து .

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருந்தது. காவிரி ஆற்றில் தொடர்ந்து படிப்படியாக நீர் வரத்து அதிகரித்து கொண்டே வருவதால் 11 மணி நிலவரப்படி நொடிக்கு 1.40 ஆயிரம் கன அடியாக அதிகரித்து. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் பிரதான அருவி, மெயின் அருவி, சினிஅருவி, ஐவார் பாணி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நீரில் மூழ்கின. 

மேலும் காவிரி கரையோர பகுதியான சத்திரம், முதலை பண்ணை , ஊட்டமலை, ஆலாம்பாடி பகுதியில் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்காதவாறு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.