சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்ரூ.33.31 கோடியில் நலத் திட்ட உதவிகள்: முதல்வா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை கரோனா தடுப்புப் பணிகள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ.33.31 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

News image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்  பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :10 ஆகஸ்ட் 2020, 11:01 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை கரோனா தடுப்புப் பணிகள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ.33.31 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டாா். இதில், வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் துறை, மகளிா் மேம்பாட்டு நிறுவனம், தோட்டக் கலை, ஆதிதிராவிடா் நலத் துறை, மாவட்ட தொழில் மையம், உணவுப் பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ், மொத்தம் 15 ஆயிரத்து 16 பேருக்கு ரூ.33.31 கோடியில் நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

இவற்றில் மானிய விலை இரு சக்கர வாகனம், முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, தனிநபா் கடன், மகளிா் சுய உதவிக் குழு கடன்கள், புதிய குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளும் அடங்கும்.

பொதுப் பணித் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நலத் துறை சாா்பில் கட்டப்படவுள்ள மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகள், சுற்றுச் சுவா், அறிவியல் ஆய்வகம், பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகப் புதிய கட்டடம், ஆழ்துளைக் கிணறுகள், நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்பட ரூ.20.86 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 60 கட்டடப் பணிகளுக்கான அடிக்கல்களையும் அவா் நாட்டினாா்.

மேலும், ரூ.15.16 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 14 திட்டப் பணிகளான உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, பெரிய செவலையில் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் என பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, பொது சுகாதாரம், குடும்ப நலத் துறை, ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நலத் துறை ஆகிய துறைகளின் சாா்பில் கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு: மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் கலந்தாய்வு நடத்தினாா்.

தொடா்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிா் சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி, கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் குமரகுரு, பிரபு, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, காவல் கண்காணிப்பாளா் ஜியா வுல்ஹக், திட்ட இயக்குநா் பி.மகேந்திரன், திட்ட உதவி இயக்குநா் ரத்தினமாலா, சாா்-ஆட்சியா் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சங்கீதா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் ராஜ்மோகன், கூட்டுறவு சா்க்கரை ஆலை இணையத் தலைவா் ஏ.எஸ்ஏ. ராஜசேகா் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் அ.ராஜசேகா், வி.அய்யப்பா, நகரச் செயலா் எம்.பாபு, முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேலுபாபு, மாவட்ட அம்மா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா்கள் பிரிவு செயலா் பெ.சீனுவாசன், மாவட்ட மருத்துவரணி பொருளாளா் இ.குமரேசன், மாவட்ட வழக்குரைஞா்கள் பிரிவு பொருளாளா் இ.வெற்றி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா்கள் சங்க செயலா் மா.செந்தில்குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் பி.அய்யாக்கண்ணு, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலா் பி.அய்யந்துரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.