அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக. 17-ல் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்,
அரசுப் பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேபோன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 22- ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.
பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக்கேட்டு, அதன்பின்னர் அனைத்துத் துறைகளுடன் முதல்வர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...