அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு: சவரனுக்கு ரூ.1,832 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

News image
gold prices continue- o fall in chennai
Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:21 am

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதையடுத்து, இதன் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. 

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. 

தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கடந்த சனி, திங்கள் ஆகிய இரு நாள்கள் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்தது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.1,832 குறைந்து, ரூ.40,104-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.229 குறைந்து, ரூ.5,013 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் ரூ.2,400 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி கிராமுக்கு 12.30 குறைந்து, ரூ.70.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.70,500 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................... 5,013 

1 சவரன் தங்கம்............................... 40,104

1 கிராம் வெள்ளி............................. 70.50

1 கிலோ வெள்ளி............................70,500

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்........................... 5,242

1 சவரன் தங்கம்............................... 41,936

1 கிராம் வெள்ளி............................. 82.80

1 கிலோ வெள்ளி.............................82,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.