ஆம்பூர் அருகே அடுத்தடுத்து நடந்த இரு சாலை விபத்தில் 2 முதியவர்கள் பலி
ஆம்பூர் அருகே வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சாலை விபத்தில் 2 முதியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


ஆம்பூர் அருகே வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சாலை விபத்தில் 2 முதியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த தோட்டாளம் கொல்லாபுரத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ராமமூர்த்தி என்பவர் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மேல்கொத்தகுப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபால் என்பவர் மீது லோடு ஆட்டோ மோதியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஆம்பூர் நகர காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...