தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து நடந்த இரு சாலை விபத்தில் 2  முதியவர்கள் பலி 

ஆம்பூர் அருகே வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சாலை விபத்தில் 2 முதியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
கோப்புப் படம்
Updated On :13 ஆகஸ்ட் 2020, 6:08 am

DIN

ஆம்பூர் அருகே வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சாலை விபத்தில் 2 முதியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த தோட்டாளம் கொல்லாபுரத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ராமமூர்த்தி என்பவர் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மேல்கொத்தகுப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபால் என்பவர் மீது லோடு ஆட்டோ மோதியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஆம்பூர் நகர காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.