நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உரிமைமீறல் நோட்டீஸ் விவகாரம்: கு.க.செல்வம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் சார்பில் உயர் நீதிமன்ற முதல் அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :17 ஆகஸ்ட் 2020, 6:06 am

DIN

உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் சார்பில் உயர் நீதிமன்ற முதல் அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலகிருஷ்ணன், 
சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கொண்டு வந்த விவகாரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் அனுப்பப்பட்டது. 

இந்த வழக்கில் மற்ற திமுக உறுப்பினர்களின் சார்பான வாதங்களையே தன் தரப்பு  வாதமாக எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து முறையீட்டார். அப்போது நீதிபதிகள், விசாரணையின் போது எங்கு சென்றீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. உரிய மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.