சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இ-பாஸ் தளர்வால் பரனூர் சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசல்

இ-பாஸ் தளர்வால் சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :17 ஆகஸ்ட் 2020, 4:40 am

இ-பாஸ் தளர்வால் சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இணைய வழி அனுமதிச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டது. பல மாவட்டங்களில் இணையவழி அனுமதிச் சீட்டு வழங்குவதில் அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அனுமதிச் சீட்டு பெறுவதில் பெறும் சிரமம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதைத் தொடா்ந்து, இணைய வழி அனுமதிச் சீட்டு வழங்கும் முறையில் பல்வேறு தளா்வுகளை முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இ-பாஸ் தளர்வால் சென்னையின் நுழைவு வாயிலான செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களில் சென்னைக்கு வரும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இதனால் சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதாா் அல்லது குடும்ப அட்டையுடன் செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்தால் எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.