வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விநாயகர் சிலைகளுக்கு அனுமதி: முதல்வரைச் சந்தித்து பாஜக தலைவர் வேண்டுகோள்

​தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதியளிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேட்டுக்கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 2:25 pm

DIN


தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதியளிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேட்டுக்கொண்டார்.

தமிழக முதல்வரைச் சந்தித்த பிறகு எல். முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"விநாயகர் சதுர்த்தி விழாவை, அரசின் சட்டத்துக்குள்பட்டு சமூக இடைவெளியுடன் கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு தெரிவிப்பதாக முதல்வர் கூறினார். முதல்வருடனான சந்திப்பு திருப்தியளிக்கும் வகையில் இருந்தது. விநாயகர் சதுர்த்தி விழா பற்றி மட்டுமே இந்த சந்திப்பில் பேசப்பட்டது." என்றார் முருகன்.

முன்னதாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, பொது இடங்களில் சிலை நிறுவக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.