கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கை தள்ளுபடி செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:30 am

DIN

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கை தள்ளுபடி செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சிலம்பரசன் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், மதுபான கடைகள் அருகில் உள்ள பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிக அளவில் நடக்கிறது. இதனால் விபத்துகள் நடைபெறுவதாக  புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுபான கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு. எனவே அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.