சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூ.40 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, 40 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.

News image
gold price at least below 40 thousand
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:36 am

DIN


சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, 40 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. 

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.39,944-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து, ரூ.4,993-ஆக விற்கப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.72.20 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.72,200 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,993

1 சவரன் தங்கம்............................... 39,944

1 கிராம் வெள்ளி............................. 72.20

1 கிலோ வெள்ளி............................72,200

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 5,048

1 சவரன் தங்கம்............................... 40,384

1 கிராம் வெள்ளி............................. 72.70

1 கிலோ வெள்ளி............................72,700
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.