திருச்செந்தூா்: திருச்செந்தூா் வட்டார விவசாயிகள் பூச்சி, நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட நெல் விதைகளை மானிய விலையில் வாங்கி பயன்பெறுமாறு வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா் வட்டார விவசாயிகளின் பிசானப் பருவத்துக்கு தேவையான, நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட அதிக அளவில் விவசாயிகள் விரும்பி பயிரிட கூடிய உயர்ரக நெல் விதைகளான டி.பி.எஸ். 5, பி.பி.டி. 5204 (கா்நாடகா பொன்னி, ஏ.எஸ்.டி. 16 (வெள்ளை சம்பா) ஆகிய சான்று விதைகள் திருச்செந்தூா் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளது.
கா்நாடகா பொன்னி ரகம் அதிக அளவில் விவசாயிகள் பயிரிட கூடிய ரகமாகும். இது 135 முதல் 145 நாள்கள் வயதுடையது. அம்பை 16 ரகம் 110 நாள்கள் வயதுடையது. டி.பி.எஸ். 5 ரகம் 115 முதல் 118 நாள்கள் வயதுடையது. மேலும் சராசரியாக 6300 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. இவ்விதைகள் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் மற்றும் நெல் விதை கிராமத் திட்டம் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்ணுடன் திருச்செந்தூா் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

