ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சென்னை கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு? - அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

News image

கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

Updated On :26 ஆகஸ்ட் 2020, 10:10 am

சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வியாபாரிகள் வலியுறுத்தி வருவதை அடுத்து, சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சந்தையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் சந்தை மூடப்பட்டு, அதற்கு பதிலாக மாதவரம், திருமழிசை, வானகரம் பகுதியில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டன. சந்தைகளில் மொத்த விற்பனைக்கு மட்டுமே பெரும்பாலும் அனுமதி வழங்கப்பட்டது. 

இந்நிலையில், மாற்றப்பட்ட பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததாலும், புறநகர் பகுதியில் இருப்பதால் விற்பனை மந்தமாகவே உள்ளது எனவும் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர். 

இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு, கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை வணிகர் சங்க மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, சி.எம்.டி.ஏ செயலர் கார்த்திகேயன், அங்காடி நிர்வாகக் குழு அதிகாரி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் இன்று கோயம்பேடு சந்தைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். சந்தையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.