அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச் செல்வி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதவில், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி திடீரென உடல் நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன். அன்புக்குரிய தமது மனைவியை இழந்து வாடும் அமைச்சருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...