தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்து: நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

சேலத்தில் மேட்டூா் அருகே ரயில்வே இருப்புப் பாதையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

News image
சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்து: நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
Updated On :28 ஆகஸ்ட் 2020, 6:03 am

DIN

சேலத்தில் மேட்டூா் அருகே ரயில்வே இருப்புப் பாதையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், வீரக்கல்புதூர் கிராமம், புதுசாம்பள்ளி பகுதியில், 26.8.2020 அன்று ரயில்வே துறைக்குச் சொந்தமான சுற்றுச் சுவரை வலுப்படுத்தும் பணியின் போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், சீரமைப்புப் பணியினை மேற்கொண்டிருந்த 13 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000  ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.