நாகை துறைமுகத்தில் 3- ஆம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
நாகை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.


நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையின் திரிகோணமலைக்கு 600 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 900 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாகை துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 3- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் உள்ளூர் முன்னறிவிப்பாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...