இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செஞ்சி அருகே விஷமருந்தி கணவன், மனைவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆர்.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்( 64). இவரது மனைவி குணசாலி( 59).

News image
ஆர்.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்( 64). இவரது மனைவி குணசாலி( 59).
Updated On :1 டிசம்பர் 2020, 6:38 am

DIN

விழுப்புரம்: குடும்பச் சண்டையில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் விரக்தியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆர்.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்( 64). இவரது மனைவி குணசாலி( 59).

இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் திருமணம் முடிந்து சென்று விட்டனர். இந்த நிலையில் முத்துக்கிருஷ்ணன் நேற்று மதியம் வீட்டில் சாப்பிடும்போது குழம்பு சரியில்லை என மனைவி குணசாலியை திட்டி உள்ளதாக தெரிகிறது.

இதில், விரக்த அடைந்த குணசாலி, வயலுக்கு வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். உடனே அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி குணசாலி உயிரிழந்தார்.

இரவு மனைவி குணசாலியின் உடலை பார்த்து விட்டுச் சென்ற முத்துகிருஷ்ணன், மனவேதனை அடைந்து,  பூச்சிகொல்லி மருந்தை குடித்து மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முத்துகிருஷ்ணன் அவரது மனைவி குணசாலி ஆகியோரது உடல் செஞ்சி அரசு மருத்துவமனை வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சத்தியமங்கலம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.