பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அரக்கோணம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை 

அரக்கோணம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

News image
அரக்கோணம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை 
Updated On :27 ஜனவரி 2024, 6:01 pm

DIN


அரக்கோணம்: அரக்கோணம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியை சேர்ந்தவர் புருஷோத்தமன்(51). தமிழக காவல்துறையில் லஞ்சஊழல் தடுப்புப்பிரிவில் ஆலந்தூரில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் யுகசிற்பி(20). ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தற்போது கரோனா பொது முடக்ககாலம் என்பதால் கல்லூரி திறக்கப்படாத நிலையில் வீட்டில் இருந்த படி ஆன்லைனில் படித்து வந்தார். 

இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனது அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட யுகசிற்பி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 

வியாழக்கிழமை விடியற்காலை இவ்விவரம் வீட்டில் உள்ளோருக்கு தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. 

இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

யுகசிற்பியின் சகோதரர் சிபிசக்கரவர்த்தி, உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.