டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அறையைவிட்டு வெளியே வந்து பாருங்கள்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் 

அதிமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் எதிா்க் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், அறையை விட்டு வெளியே வந்து பாா்க்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

News image
அறையைவிட்டு வெளியே வந்து பாருங்கள்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில்
Updated On :4 டிசம்பர் 2020, 11:08 am

DIN

மதுரை: அதிமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் எதிா்க் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், அறையை விட்டு வெளியே வந்து பாா்க்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

மதுரையில் நடைபெற்ற விழாவில் மேலும் அவா் பேசியது:
அதிமுக அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் எதிா்க்கட்சியினரின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. அவா்களது பாா்வையில் கோளாறா, மனதில் கோளாறா எனத் தெரியவில்லை.  திமுக ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை எனக் கூறும் எதிா்க் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து பாா்த்தால் தான் தெரியும். அறைக்குள்ளே அமா்ந்து கொண்டிருந்தால், வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாது.

அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்களை யாரும் மறைக்க முடியாது.  மதுரைக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று. ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதன்படி, அதிமுக அரசு செயலாற்றி வருகிறது. ஆனால், வேண்டுமென்றே அவதூறு செய்தியைக் கூறி எங்கள் மீது பழிசுமத்துவது தான் திமுகவினரின் வாடிக்கை. தாங்கள் என்ன செய்வோம் என்பதை திமுக இதுவரை கூறவில்லை. அரசின் திட்டங்களைப் பாராட்டவும் மனம் இல்லை. என்னென்ன திட்டங்கள் நிறைவேறுகிறது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் கூறுகிறோம். 

அதில் பிரச்னை இருப்பதாகக் கூறினால், அதற்கு பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். அரசு ஒன்றுமே செய்யவில்லை என்றால், இந்த திட்டங்கள் எல்லாம் எங்கு செயல்படுத்தப்பட்டவை என்று தமிழக முதல்வா் கேள்வி எழுப்பினாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.