மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழக பாஜக அறிவுசார் பிரிவின் தலைவராக ஜோதிடர் ஷெல்வீ நியமனம்

பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி நடிகர் ரஜினி தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அறிவுசார் பிரிவின் புதிய தலைவரை பாஜக அறிவித்துள்ளது. 

News image
பிரபல ஜோதிடர் ஷெல்வீ
Updated On :4 டிசம்பர் 2020, 2:47 pm

DIN

பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி நடிகர் ரஜினி தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அறிவுசார் பிரிவின் புதிய தலைவரை பாஜக அறிவித்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தார். தொடர்ந்து தான் தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை நியமித்தார்.

பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த அர்ஜுனமூர்த்தி  அக்கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவரை கட்சியின் அனைத்துவிதமான பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பதாக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீயை நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.