6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோட்டூரில் கொட்டும் மழையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய திரும்பப் பெற வலியுறுத்தி மன்னார்குடி அடுத்த கோட்டூரில் கொட்டும் மழையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
கோட்டூரில் கட்சியின் மாவட்டச் செயலர் வை.சிவபுண்ணியம் தலைமையில் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :5 டிசம்பர் 2020, 6:34 am

DIN

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மன்னார்குடி அடுத்த கோட்டூரில் கொட்டும் மழையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள  வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய திரும்பப் பெற வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி, புது தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வேலை நாள்களை 200 நாள்களாக உயர்த்திட வேண்டும். இத்திட்டத்தை, நகர்புறங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தினருக்கு, தலா ரூ.7500 வழங்க வேண்டும். மத அரசியலால் நாட்டை பிளவுப்படுத்தக் கூடாது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் நகர ஒன்றியம் பகுதியில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் மாவட்டச் செயலர் வை.சிவபுண்ணியம் தலைமையில், கொட்டும் மழையிலும் நடைபெற்று வருகிறது.

கோட்டூர் மையத்தில் சிபிஐ ஒன்றியச் செயலர் க.மாரிமுத்து, துணைச் செயலர் எம்.செந்தில்நாதன், ஒன்றியக் குழுத் தலைவர் மு.மணிமேகலை முரு கேசன், விவசாய சங்க ஒன்றியச் செயலர் ஜெ.ஜெயராமன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் சிவசண்முகம் தலைமையில் தட்டாங்கோவில், திருப்பத்தூர், திருமக் கோட்டை உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட மையங்களில் கொட்டும் மழையிலும் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.