கனமழை: எருக்கூரில்  நீலகண்ட பிரம்மச்சாரியின் வீட்டுச் சுவர் இடிந்தது

கனமழையால் மறைந்த சுதந்திர போராட்ட தியாகி எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் வீட்டின் சுவர்  இடிந்து விழுந்தது.
எருக்கூரில்  நீலகண்ட பிரம்மச்சாரியின் வீட்டுச் சுவர் இடிந்தது
எருக்கூரில்  நீலகண்ட பிரம்மச்சாரியின் வீட்டுச் சுவர் இடிந்தது
Published on
Updated on
1 min read


சீர்காழி: கனமழையால் மறைந்த சுதந்திர போராட்ட தியாகி எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் வீட்டின் சுவர்  இடிந்து விழுந்தது.

சீர்காழி அருகே எருக்கூர் அக்ரஹாரத்தில் 1889 ஆம் ஆண்டு பிறந்தவர் நீலகண்ட பிரம்மச்சாரி. இவர் சுதந்திர போராட்டத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஆஷ் துரை கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நீலகண்ட பிரம்மச்சாரி சேர்க்கப்பட்டிருந்தார்.

நீலகண்ட பிரம்மச்சாரியின் சுதந்திர போராட்டத்தை கவரப்பட்ட மகாத்மா காந்தியடிகள் நீலகண்ட பிரம்மச்சாரி சந்திக்க விரும்பியுள்ளனர். இவ்வாறு சுதந்திரத்துக்காகப் போராடி தன்னுயிர் நீத்த எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்து வாழ்ந்த வீடு எருக்கூர் அக்ரகார தெருவில் இருந்து வந்தது. அதன் பின்னர் அவரது வம்சாவழி வந்தவர்கள் பூர்வீக வீடு நாளடைவில் சேதம் ஏற்பட்டு சிதிலமடைந்தால் அதன் அருகில் வேறு வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

நீலகண்ட பிரம்மச்சாரி வாழ்ந்த வீடு முற்றிலும் சிதிலமடைந்து சுவடே இல்லாத நிலையில் முன்பக்க காம்பவுண்ட் சுவர் மட்டுமே நினைவாக இருந்து வந்தது. 

இந்த நிலையில் சீர்காழி பகுதியில் தொடர்ந்து 4 நாள்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளிக்கிழமை இரவு சுதந்திர போராட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. இதனை அவரது உறவினரான சுப்பிரமணியன் உறுதி படுத்தினார். 

சுதந்திர போராட்ட தியாகி வாழ்ந்த வீட்டின் நினைவாக இருந்த சுவரும் கனமழையில் இடிந்து விழுந்ததால்   தன்னார்வலர்கள், மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை எருக்கூர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மசாரியின் பிறந்த தினத்தை அவரது பூர்வீக வீட்டின் அருகே கொள்ளுபேரன் சுப்பிரமணியன் மற்றும் ஊர் மக்கள், பாஜகவினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com