தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சீர்காழி அருகே தண்ணீரில் மூழ்கிய 600 ஏக்கர் விளைநிலம்: விவசாயிகள் போராட்டம்

சீர்காழி அருகே  வழுதலை குடி கிராமத்தில் கடந்த ஐந்து நாள்களாக பெய்து வரும் கனமழையினால் 600  ஏக்கர் சம்பா சாகுபடி செய்த விளைநிலம் கடந்த 5 நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளது.

News image
சீர்காழி அருகே வழுதலை குடி கிராமத்தில் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :6 டிசம்பர் 2020, 9:22 am

DIN

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வழுதலை குடி கிராமத்தில் கடந்த ஐந்து நாள்களாக பெய்து வரும் கனமழையினால் 600  ஏக்கர் சம்பா சாகுபடி செய்த விளைநிலம் கடந்த 5 நாள்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் கிராமத்தில் வீடுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் மணல் சுவர்கள் இடிந்து வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளது.

'இப்பகுதியில் வடிகால் வசதி அமைத்துத் தர எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழுதலை குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் இறங்கி பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் பார்வையிட இதுவரை யாரும் வரவில்லை. வழுதலை குடி கிராமத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்பகுதியில்  சரியான வடிகால் வசதி இல்லாததால்  விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று 30க்கும் மேற்பட்ட ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.