டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் நிவாரணம்: முதல்வர்

பணியின்போது உயிரிழந்த ராணிப்பேட்டை காவலர் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated On :7 டிசம்பர் 2020, 8:59 am

DIN

பணியின்போது உயிரிழந்த ராணிப்பேட்டை காவலர் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி காவல் நிலைய சரகம், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை, அரப்பாக்கம் அருகே அமைக்கப்பட்டிருந்த காவல் சோதனைச் சாவடியில், ஆற்காடு நகர் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் 6.12.2020 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இரும்பு தடுப்பு மீது மோதியதில், தடுப்பின் மறுபுறம் நின்றிருந்த காவலர் அய்யனமூர்த்தி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பணியின் போது உயிரிழந்த காவலர் அய்யனமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தன் என்பவர் காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நான் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுளேன். பணியின் போது, உயிரிழந்த அய்யனமூர்த்தியின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.