தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேக்கடி ஏரியில் பலத்த மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேக்கடி ஏரியில் பலத்த மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

News image

தேக்கடி ஏரியில் பலத்த மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Updated On :8 டிசம்பர் 2020, 4:05 am

DIN


கம்பம்: தேக்கடி ஏரியில் பலத்த மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு மற்றும் தேக்கடி ஏரிப் பகுதியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக திங்கள்கிழமை இரவு பெரியாற்றில் 2.4 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 25.6 மில்லி மீட்டர் என பலத்த மழையும் பெய்தது இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

திங்கள்கிழமை அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 2,103 கன அடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அணைக்கு வினாடிக்கு 2,771 கன அடியாக நீர் வரத்து உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சிறிது உயர்ந்தது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்,125.20 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 3,661 மில்லியன் கன அடியாக இருந்தது.  அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,771 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1,400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

மின் உற்பத்தி

முல்லைப்பரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திங்கள்கிழமை வினாடிக்கு 1,290 கன அடி தண்ணீர் வந்தது, செவ்வாய்க்கிழமை 1,400 கன அடியாக அதிகரித்தது.  இதனால் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் மூன்று மின்னாக்கிகள் மூலம், தலா 42 மெகாவாட் என மொத்தம், 126 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.