நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புறநகர் ரயில்சேவையை தொடங்க சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புறநகர் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

News image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Updated On :9 டிசம்பர் 2020, 1:42 pm

DIN

ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புறநகர் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புறநகர் ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்து சேவையும், மெட்ரோ ரயில் சேவையும் இயக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ள அவர் புறநகர் பயணிகள் ரயில் சேவை தற்போது வரை முழுமையாக இயக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஏழை எளிய மக்கள் போக்குவரத்துக்கு கணிசமான தொகையை செலவழித்து வரும் நிலையில் அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு புறநகர் ரயில் பயணிகள் சேவையை முழுமையாக இயக்கிட வேண்டுமென தென்னக ரயில்வே மற்றும் தமிழக அரசை கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.