திருவாரூர்: விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியது என்பதாலேயே வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறோம் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில், கனமழையால் ஏற்பட்ட சேதங்களை அவர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, நாகை மாவட்டத்தில் மழை பாதிப்பு சேதங்களை ஆய்வு செய்த பின் திருவாரூர் மாவட்டம் வந்தார். திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி பகுதியில் வயலில் இறங்கி, சேதத்தை பார்வையிட்டார். விவசாயிகள் பயிர்களை முதல்வருக்கு எடுத்துக் காட்டினர்.

இதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளி அமைக்கப்பட்டிருந்த முகாமில், 500 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களுக்கு மதிய உணவையும் அளித்தார்.
பின்னர், கச்சனம் அருகே வயலில் இறங்கி, பயிர் சேதங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, தென்னவராயநல்லூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களின் புள்ளி விவரங்களை கூறினர். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தான் ஒரு விவசாயியாக இருப்பதாலேயே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இந்த சட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியது என்பதாலேயே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார்.

பின்னர், ஆ.ராசாவின் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், திமுகவுக்கு வேண்டுமானால் அவர் தலைவராக இருக்கலாம். ஆனால், விவாதம் செய்யக்கூடிய அளவுக்கு சரி சமமான தலைவர் ஆ. ராசா இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


