திமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

Published On :

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று  தலைமைச் செயலகத்தில், 2020-2021ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 214 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 5,45,166 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002-ஆம் கல்வியாண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

தமிழக அரசு, 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை சீரிய முறையில் தொடர்ந்து 2020-2021-ஆம் கல்வியாண்டில் செயல்படுத்துகிறது. இந்த ஆண்டு 2,38,456 மாணவர்கள், 3,06,710 மாணவியர், என மொத்தம் 5,45,166 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் இன்று 9 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.