டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோவை, திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்

கோவை மற்றும் திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டடங்களுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

News image
கோவை, திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்
Updated On :11 டிசம்பர் 2020, 10:12 am

DIN

கோவை மற்றும் திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டடங்களுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். 

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த தொழில்கள் தமிழகத்தில் தழைத்து வளர்ந்திட தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எல்கோசெஸ்கள்) நிறுவப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தொழில் முனைவோர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதனைச் சார்ந்த வணிகத்தை தொடங்க ஏதுவாக, கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சியில் உள்ள எல்கோசெஸ்ஸில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும், திருச்சிராப்பள்ளியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவிலும் இரண்டு தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். 

புதிதாக கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டடத்தில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இடம் வழங்கப்படும். இப்பூங்கா முழுமையாக செயல்படும்போது, சுமார் 20,000 நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 40,000 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் தகவல் தொழில்நுட்ப துறையில் கோயம்புத்தூர் முக்கிய மையமாக அமையும். மேலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 1.16 லட்சம் சதுர அடி பரப்பளவில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டடத்தில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இடம் வழங்கப்படும். இப்பூங்கா முழுமையாக செயல்படும்போது, சுமார் 10,000 நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 20,000 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.