விராலிமலையில் சாலை விபத்து: நால்வர் காயம்
விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியில் மதுரையிலிருந்து திருச்சி வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள விராலிமலை காவல் ஆய்வாளர் வேல்முருகன் சென்ற அரசு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு விசாரணை மேற்கொண்டிருந்தபோது மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் ஒன்று காவல் ஆய்வாளரின் சுமோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணித்த 4 பேர் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கார் ஓட்டுநர் அழகுராஜனை விராலிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...